இனி டாக்டர் எடப்பாடி பழனிசாமி..! கெத்தை கூட்டி மாஸ் காட்டும் முதல்வர்..!

Published : Oct 20, 2019, 04:32 PM ISTUpdated : Oct 20, 2019, 04:40 PM IST
இனி டாக்டர் எடப்பாடி பழனிசாமி..! கெத்தை கூட்டி மாஸ் காட்டும் முதல்வர்..!

சுருக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் தலைமை தாங்கினார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அவருடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனையின் தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், நடிகையும் பரத நாட்டிய கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி சண்முகம் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்று முதல்வர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, பாண்டிய ராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!