குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.பி.எஸ்.அதிகாரி … என்ன செய்தார் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Dec 12, 2019, 8:51 AM IST
Highlights

குடியுரிமை திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பப்டடுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி  ஒருவர் தனது பதவியை ரா0ஜனாமா செய்துள்ளார்.

பிற நாடுகளிலிருந்து சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 
 
இந்த மசோதாவிற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது' என, விமர்சிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பின்னர் . மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின. 

மசோதாவை ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பக்கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மான மும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மும்பையில் காவல்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் அப்துர் ரஹ்மான் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியதை அறிந்த உடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக டுவிட்டர் மூலம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவே தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

click me!