நிவர் புயலால் குடிமகன்களுக்கு அதிர்ச்சி... டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்..!

By Thiraviaraj RMFirst Published Nov 25, 2020, 2:13 PM IST
Highlights

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும், அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றும் நாளையும், தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அதனுடன் பிற மாவட்டங்களில் சூழ்நிலைக்கேற்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

click me!