குடிமகன்கள் நாளை டாஸ்மாக் போகும் போது ஆதார் அட்டை கொண்டு போங்க. இல்லாட்டி உங்களுக்கு சரக்கு இல்லையாம்.!!

By Thiraviaraj RMFirst Published May 6, 2020, 11:02 PM IST
Highlights
சென்னை உயர்நீதிமன்றம் மது விற்பனைக்கு தடையில்லை; என உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிலையில் நாளை டாஸ்மாக் கடைகள் மது விற்பனைக்கு தயாராகிவிட்டன. ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது. டாஸ்மாக் நிர்வாகம் மது வாங்க வரும் குடிமகன்களிடம் ஆதார் பெற்றுக்கொண்டு தான் மது வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

T.Balamurukan

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட இருக்கிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ 10 முதல் ரூ20 வரைக்கும் விலை ஏற்றதுடன் விற்பனையாக இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் நாளை, 'பொதுமக்கள் தங்களது வீடுகளில் 'கருப்பு பேட்ச்' அணிந்து கொண்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என்று ஆதரவு திரட்டி வருகிறார். ஊரடங்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மதுக்கடைகளை திறக்க அதிமுக அரசு தீவிரம் காட்டியிருக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை முழுமையாக வழங்காததைக் கண்டித்தும் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது வாங்க வரும் வாடிக்கையாளரின் ஆதார் எண், பெயர், முகவரியை ரசீதில் பதிவிட வேண்டும். வாடிக்கையாளரிடம் ஒரு நகல், மறறொன்றை பில் புத்தகத்தில் இணைக்க வேண்டும். தினந்தரும் பில் புத்தகத்தின் நகலை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

click me!