சீனா மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் அமெரிக்கா.!! எச்சரிக்கும் ஐசிஐசி ஆர் நிறுவனம்.!!

By Thiraviaraj RMFirst Published May 6, 2020, 10:32 PM IST
Highlights

கொரோனா வைரஸ் பரப்பியதாக சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவுக்கு சீனாவே காரணம் என கருதுகிறது அமெரிக்கா. இதனால் அமெரிக்கா சீனா மீது எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சீனா அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

T.Balamurukan

கொரோனா வைரஸ் பரப்பியதாக சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவுக்கு சீனாவே காரணம் என கருதுகிறது அமெரிக்கா. இதனால் அமெரிக்கா சீனா மீது எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சீனா அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கொரோனாவால் பொருளாதாரா வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றது. உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா பொருளாதார சீரழிவுக்கு ஆளாகி இருக்கிறது. பொருளாதாரத்தில் பழைய நிலை அடைய அமெரிக்கா சுமார் 217லட்சம் கோடி கடன் வாங்க இருக்கிறது.இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொத்து கொத்தாக பலியானவர்கள் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். இதனால் உலக சுகாதார நிறுவனத்து வழங்கி வந்த நிதியையும் குறைத்துக்கொண்டது அமெரிக்கா.

சீனாவில் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து 13விமானங்கள் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்ததவர்களால் தான் கொரோனா தொற்று அமெரிக்காவில் கோரதாண்டவம் ஆட காரணமாக அமைந்துவிட்டது என்று டிரம்ப் குற்றம் சுமத்தியிருக்கிறார்.அமெரிக்காவில் உள்ள ஆங்கில நாளிதழ் ஒன்று அமெரிக்காவில் கொரோனா பரவியதற்கு சீனா தான் காரணம் என கட்டுரை வெளியிட்டிருந்தது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் சீரழிந்து வரும் நிலையில் சீனாவின் தொழில் முதலீடுகள் மில்லியன் கணக்கில் அதிகரித்துள்ளது. சீனா தற்போது முழு சுதந்திரமாக இயங்கி வருகிறது.தற்போதைய செய்தி பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு போக ஆரம்பித்துவிட்டார்கள். ஆக சீனாவில் எந்த பகுதியும் இதுவரைக்கும் முடக்கப்படவில்லை. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் சீனா மீது பொருளாதார விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது. இந்த பொருளாதார விலகலுக்கு மற்ற நாடுகளின் ஆதரவை கோரியிருந்தது ஜப்பான்.


சீனாவுக்கு எதிரான உலக நாடுகளின் கடும்போக்கு கடந்த 1989 ஆம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவத்திற்கு பின்னர் இருந்ததைவிட தற்போது கடுமையாக உள்ளதாக ஐசிஐசிஆர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாம்
.இதன் விளைவாக உலகின் இரு முக்கிய சக்திகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

  

click me!