பென்னிக்ஸ்- ஜெயராஜ் படுகொலைக்கு கிறித்தவ வெறுப்பே காரணம்... தொல்.திருமாவளவன் கதறல்..!

Published : Jul 04, 2020, 04:40 PM IST
பென்னிக்ஸ்- ஜெயராஜ் படுகொலைக்கு  கிறித்தவ வெறுப்பே காரணம்... தொல்.திருமாவளவன் கதறல்..!

சுருக்கம்

சாத்தான்குளம் காவல்வதை படுகொலைக்கு  கிறித்தவவெறுப்பைக் கக்கிய சனாதனிகளின் ஊடுருவல் காரணமென சொல்லப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஊடகவியலாளர்களைக் குறிவைக்கும் சனாதனிகள். தமிழகத்தில் பரவும் சனாதனப் பயங்கரவாதம். சாத்தான்குளம் காவல்வதை படுகொலைக்கு  கிறித்தவவெறுப்பைக் கக்கிய சனாதனிகளின் ஊடுருவல் காரணமென சொல்லப்படுகிறது. எனவே, அரசு இப்போக்கை அலட்சியப் படுத்திவிடக் கூடாது.  சனாதனம் எச்சரிக்கை!?! எனவும்

அடுத்த பதிவில், ‘’சாதிப்பித்தர்களின் கூட்டுச்சதிக்கு இளவரசன் பலியான நாள். நாடக அரசியலுக்காக இளவரசனை நரபலி கொடுத்து திவ்யாவை நடுத்தெருவில் விட்ட  சனாதனிகளை அச்சுறுத்தும் நாள். சாதி வரம்புகளைத் தாண்டி தன்மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள். காதல்வெல்லும்..!’’ எனவும் தெரிவித்துள்ளார். 

எது ஊடக தர்மம்,இந்துக்களையும்,இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும் மட்டுமே கேவலப்படுத்துவது தான் ஊடக தர்மமா,கருப்பர்கூட்டம் பதிவுகளையும்,வீடியோக்களையும் பார்த்துவிட்டு கருத்து கூறவும்,ஒரு மதத்தை இழிவு படுத்துவது சரி என்றால், அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவதும் சரியே என நெட்டிசன்கள் திருமாவளவனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி