திமுக கூட்டணி வேட்பாளர் விபத்தில் சிக்கினார் !! சாலை விபத்தில் படுகாயம் !!

Published : Apr 17, 2019, 10:52 PM IST
திமுக கூட்டணி வேட்பாளர் விபத்தில் சிக்கினார் !!  சாலை விபத்தில் படுகாயம் !!

சுருக்கம்

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், நல்லிபாளையம் அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்தார். விபத்தில் காயமடைந்த சின்ராஜ் மற்றும் அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தில் வேலூர் தவிர மீதியுள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அவற்றுடன் 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. 

நேற்றுடன் பிரச்சாரம் முடிந்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் இன்று ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் என்பவர் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர்  தனது மனைவியுடன் இன்று காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் நல்லிபாளையம் அருகே விபத்திற்குள்ளாகியது. 

இந்த விபத்தில் சின்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த சின்ராஜ், அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.. பிரதமரை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. இபிஎஸ் மீதும் சரமாரி அட்டாக்!
ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!