வேலூரில் தேர்தல் விடுமுறை ரத்து ! தேர்தல் நிறுத்தப்பட்டதால் நடவடிக்கை !!

By Selvanayagam PFirst Published Apr 17, 2019, 10:16 PM IST
Highlights

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை 4 இடங்களில்  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கடந்த 11 ஆத் தேதி 91 தொகுதிகளுக்கு  முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையயொட்டி தமிழகத்தில்  நாளை 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அன்றைய தேதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பணம் பறிமுதல் காரணமாக வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில்  வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. 

தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 4 இடங்களில் விடுமுறை ரத்து  செய்யப்பட்டுள்ளது. வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், வாணியம்பாடி பகுதிகளில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

click me!