அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க சீன மாணவர்களுக்கு தடை.!! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு.!!

By T BalamurukanFirst Published May 31, 2020, 12:03 AM IST
Highlights

அமெரிக்க நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகின்றார்கள். தற்போது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் முட்டல் மோதல் வெடித்துள்ள நிலையில் சீனா மாணவர்களை வெளியேற்றும் வேலை அமெரிக்காவில் நடந்து வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

அமெரிக்க நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகின்றார்கள். தற்போது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் முட்டல் மோதல் வெடித்துள்ள நிலையில் சீனா மாணவர்களை வெளியேற்றும் வேலை அமெரிக்காவில் நடந்து வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் காலனியாக இருந்த ஹாங் காங் நகரம் சீனாவின் ஒரு பகுதியாக உள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் ஹாங் காங்கிற்கு என்று சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. அதை சிதைக்கும் வகையில் சீன நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹாங் காங்கிற்கு அளித்து வந்த சிறப்பு சலுகைகளை நீக்குவதாக அறிவித்துள்ளார்.  அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சீன மாணவர்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்அதிபர் டிரம்ப். 

ஹாங் காங் சர்ச்சை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் அதிபர் டிரம்ப்... "ஹாங்காங்கிற்கு என்று ஒரு பெருமை இருக்கிறது. அதைக் சீர்குலைக்கும் வகையில் சீனா நடந்து கொள்கிறது. இது ஹாங்காங் மக்களுக்கு செய்யும் இழுக்கு, சீன மக்களுக்கு செய்யும் இழுக்கு. ஏன், உலக மக்களுக்கே செய்யும் இழுக்கு என்றும் உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு சாதகமாக நடந்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையில் இருக்கும் உறவை துண்டிக்கப் போகிறோம்." என்றும் கூறியிருக்கிறார். 

இவைகளைவிட, சீனா அமெரிக்கா உறவில் மிகப் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக, சீன ராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் அமெரிக்காவில் பயிலும் அந்நாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.அமெரிக்க கல்வி நிறுவனங்களிலிருந்து சீன மாணவர்களை வெளியேற்றுவது என்பது, அக்கல்வி நிறுவனங்களின் நிதி நிலைமையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இதன்காரணம் அமெரிக்க பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டு மாணவர்களிலேயே சீனாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பேர் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!