#Unmaskingchina இந்தியா மீது சீனர்கள் அதிர வைக்கும் அட்டாக்... நீங்களும் நேரடியாக பாதிக்கப்படக்கூடும் உஷார்..!

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2020, 12:17 PM IST
Highlights

இந்திய -சீனா எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தியாவில் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட 40,000 மேற்பட்ட இணையதள பக்கங்களில் சீன ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 5 நாட்களில் 40,300 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அதில், பெரும்பாலும் சீனாவின் செங்டு பகுதியில் உள்ள ஹேக்கர்களால் நடத்தப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. இதுவரை 20 லட்சம் நபர்களின் இ-மெயில் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் தங்களது கணினிகளில் மேம்படுத்தப்பட்ட ஃபையர்வால்களை பயன்படுத்துவதுடன், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவைகளின் பாஸ்வேர்டுகளை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
click me!