#Unmaskingchina வீடுகளில் சீன மின்சார மீட்டர்களை அகற்ற அதிரடி முடிவு... பெருகும் எதிர்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2020, 11:58 AM IST
Highlights

உத்தரப்பிரதேச மநிலத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்டு உபாயயோகப்படுத்தப்படும் மின்சார மீட்டர்களை வீடுகளில் இருந்து அகற்ற் அம்மாநில  அரசு முடிவெடுத்துள்ளது.
 

உத்தரப்பிரதேச மநிலத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்டு உபாயயோகப்படுத்தப்படும் மின்சார மீட்டர்களை வீடுகளில் இருந்து அகற்ற் அம்மாநில  அரசு முடிவெடுத்துள்ளது.

இந்திய-சீனா எல்லையான லடாக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. சீன ராணுவம் தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். தற்போது இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனப்பொருட்களை தவிர்க்க வேண்டும் என பலரும் கோடிக்கை விடுத்து வருகின்றனர். இதனால்,  இந்திய மக்களிடையே சீனப்பொருட்களின் மீதும், உணவுகளின் மீதும் பெரும் எதிர்ப்பு கிளம்பி சீனா சாதனங்களை புறக்கணிப்போம் என்ற குரல் எழுந்துள்ளது.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநில மின்சாரத்துறை வாரியம் ஒரு பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. வீடுகளில் கணக்கிட பயன்படும் சீன மீட்டர்களை புறக்கணிக்குமாறு கூறியுள்ளது. முதற்கட்டமாக கோரக்பூரில் உள்ள 15 ஆயிரம் வீடுகளில் மின் ஓட்டத்தை அளவிட பொருத்தப்பட்ட சீன மீட்டர்களை அகற்றி விட்டு புதிய இந்தியத் தயாரிப்பு மீட்டர்களை பொருத்த அம்மாநில மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு செயல்பாட்டில் மற்றும் பராமரிப்புப் பணிகளில் உள்ள சீனப் பொருட்கள் உபயோகப்படுத்தப்படும் என உத்தரப்பிரதேச மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

click me!