கொரோனா பாதிப்பு.... சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ..!

By vinoth kumarFirst Published Jun 24, 2020, 11:17 AM IST
Highlights

மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பு மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4.5 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14,476 ஆக உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாகமாக உயிரிழந்தார். 

60 வயதான அவரின் மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். பால்டா தொகுதியில் இருந்து 3 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட கோஷ், கட்சியின் பொருளாளராகவும் 1998 முதல் இருந்துள்ளார். அவரது மறைவு மிகுந்த வருத்ததை அளிக்கிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்தார், அவர் அர்ப்பணிப்புடன் கட்சி மற்றும் மக்கள் பணியாற்றினார். எங்கள் அனைவரின் சார்பாக, அவரது மனைவி ஜர்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறி உள்ளார். 

click me!