சீனப் படைகள் இந்தியாவை நெருங்கக் கூட முடியாது..!! காலரை தூக்கிவிட்டு தில்லுகாட்டும் விமானப்படை தளபதி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2020, 12:22 PM IST
Highlights

நாங்கள்  ரஃபேல், அப்பாச்சி மற்றும் சீனுக் போன்ற அதி நவீன பைட்டர்களை களத்தில் இறக்க உள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஃபேல் மற்றும் எல்.சி.ஏ மார்க்-1 ஆகியவற்றை படைகளில் அதிகளவில் இணைக்க உள்ளோம்

சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட  அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய விமானப்படை தயாராக உள்ளது என  தலைமை ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்  பதாரியா தெரிவித்துள்ளார். வடக்கு பிராந்தியத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவை சீனாவால் அசைத்துக்கூட பார்க்க முடியாது எனவும், இந்தியாவை சீன படைகளால் நெருங்ககூட முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். லடாக்கில் இந்தியாவின் நிலைப்பாடு வலுவானது என்றும், இரு முனைகளில் தாக்குதல் நடந்தாலும் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைகள் கடந்த மே மாதம் முதல் மோதல் இருந்து வருகிறது. இந்திய எல்லைகளை ஆக்கிரமித்து சீன அத்துமீறி நடந்தது. இதுதொடர்பாக கல்வானில் ஜூன் 15ஆம் தேதி அதிகாலையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது ஆனால் அது வெளியிடப்படவில்லை. அதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. சீனா சில பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள மறுத்து வருவதுடன் இந்தியாவை எல்லையில் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் வடக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய வீரர்கள் எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கை மிகவும் மோசமானது என்றும், தீவிர ஆத்திரமூட்டல் என்றும் சீனா கண்டித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையை உடனே நிறுத்துமாறு இந்திய தரப்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அது கூறியுள்ளது. இந்நிலையில் மறுபுறம் எல்லையில் பதற்றத்தை தடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  அதே நேரத்தில் சீனா தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து வருகிறது, குறிப்பாக டோக்லாம் இப்பகுதியில் ஏராளமான போர் தளவாடங்களையும், ஏவுகணைகளை வீசி தாக்கக்கூடிய பீரங்கிகளையும் சீனா குவித்து வருகிறது.  இதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவின் முப்படைகளும் தயாராகி வருகிறது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய தலைமை ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதாரியா, தற்போதைய சூழ்நிலையில் வடக்கு பிராந்தியத்தில் எங்களைத் தோற்கடிக்க சீனாவுக்கு வழி இல்லை.  

எல்லையில் இந்தியாவின் நிலைபாடு வலுவானது, மட்டுமின்றி இரண்டு முனைகளில் போர் நடந்தாலும், அதை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளது. அதாவது சீனா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் எல்லையில் இந்தியாவே எதிர்க்கும் பட்சத்தில் அதை எல்லா வகையிலும் முறியடிக்க இந்தியா தயாராக உள்ளது. தற்போது அண்டை நாடுகளிடமிருந்து அதிகரித்து வரும் ஆபத்தை கருத்தில்கொண்டு, போரின் ஒவ்வொரு முனையிலும் முழுமையான பலத்துடன் முன்னேற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய எடுத்துள்ளது. மொத்தத்தில் இந்தியா செயல்பாட்டு ரீதியாக சிறந்து விளங்குகிறது என நான் உறுதியளிக்கிறேன். லடாக்கில் படைகள் நிலை நிறுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், தேவையான அனைத்து செயல்பாட்டு இடங்களிலும் நாங்கள் படைகளை நிலை நிறுத்தியுள்ளோம். எங்கள் நிலைபாடு மிக துல்லியமாகவும், ஒருவேளை பதற்றம் அதிகரித்தால் சீனாவுக்கு சிறந்த பதிலடி கொடுக்கும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு சர்ச்சையையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இரண்டு முனைகளில் போர் நடந்தாலும் அதை எதிர்த்து போராட இந்தியா தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாங்கள்  ரஃபேல், அப்பாச்சி மற்றும் சீனுக் போன்ற அதி நவீன பைட்டர்களை களத்தில் இறக்க உள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஃபேல் மற்றும் எல்.சி.ஏ மார்க்-1 ஆகியவற்றை படைகளில் அதிகளவில் இணைக்க உள்ளோம். மேலும் இவைகளுடன் கூடுதலாக மிக்-29 விமானங்களும் களத்தில் இறக்கப்படும், லைட் காம்பாக்ட் விமானத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 83 எல்.ஐ.சி மார்க்-1 ஏ படைப்பிரிவில் இணைக்கப்பட உள்ளது. அக்டோபர்-8 ஆம் தேதி முதல், முதல்முறையாக ரஃபேல் இந்திய விமானப்படை தின அணிவகுப்பில் இடம்பெறவுள்ளது. அது அன்று தனது முழு வலிமையை வானத்தில் வெளிப்படுத்தவுள்ளது என அவர் கூறினார். 

 

click me!