உன் தாத்தாவிடமே அரசியல் செய்தவன்... செஞ்சிருவேன்... உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை..!

Published : Oct 06, 2020, 12:09 PM IST
உன் தாத்தாவிடமே அரசியல் செய்தவன்... செஞ்சிருவேன்... உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை..!

சுருக்கம்

கலைஞரிடமே அரசியல் செய்தவன். உதயநிதி, நான் யார் என உன் அப்பாவிடம் கேள். இந்த மிரட்டுகிற வேலை மயிரை இனி பண்ணாதே.  

திமுகவின் முக்கிய அதிகாரமாகவும் செயல்பட்டு வரும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினை ‘செஞ்சுருவேன்’என  சமூகவலைதளத்தில் பகிரங்கமாக பத்திரிக்கையாளர் ஒருவர் மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் நிகழ்வுகளை காரசாரமாக பதிவிட்டும், விமர்சித்தும் வருபவர்  சவுக்கு சங்கர். பாஜக, அதிமுகவை அதிகம் விமர்சித்து வந்தாலும் திமுக மீது இவர் கொண்டுள்ள நேசம் அவ்வப்போது இழையோடும்.  ஆனால், அப்படிப்பட்ட சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதியை பகிரங்கமாக பங்கம் செய்திருக்கிறார். 

 

அவரது பதிவில் ,’’கலைஞரிடமே அரசியல் செய்தவன். உதயநிதி, நான் யார் என உன் அப்பாவிடம் கேள். இந்த மிரட்டுகிற வேலை மயிரை இனி பண்ணாதே.  சுஜய், ரத்தீஷ், கார்த்தி எல்லாரையும், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். செஞ்சுருவேன். மூடிக் கொண்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யார் என எனக்குத் தெரியாதா ?’’என கடுமையான சொற்களை பிரயோகப்படுத்தி இருக்கிறார் சவுக்கு சங்கர். 

 

உதயநிதி தன்னை மிரட்டியதற்காக இப்படி சவுக்கு சங்கர் பதிவிட்டிருப்பதாக கணிக்க முடிகிறது. ஆனால் உண்மையில் சவுக்கை உதயநிதி ஸ்டாலின் மிரட்டினாரா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அப்படி என்றால் ஏன் மிரட்டினார்.. அதற்கான காரணம் என்ன? என்கிற தகவல் வெளியாகவில்லை.

 

அதுமட்டுமல்ல... ஊடக நெரியாளர் மதன் ரவிச்சந்திரனையும் வம்பிற்கிழுத்துள்ளார் சவுக்கு. ‘’டேய் மதனா..! Underperformer ஆமே நீ. SP infocity  Perungudi உன் கூட வேலை பாத்த பொம்பளை புள்ளைங்க நிறைய பேரு உன் மேல பாலியல் புகார் குடுத்துருக்காங்களாமே’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கும் சவுக்குக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்தோடு நாம் தமிழர் கட்சி சீமானின் தொலைபேசி எண்ணெய் ட்விட்டடில் பதிவிட்டு ‘டேய் சீமான். கத்தி யாரு குத்துனாலும் குத்தும்’எனப்பதிவிட்டுள்ளார்.  ஆனால், சவுக்கு சங்கர் தன்னை நடுநிலையாளராக காட்டிக் கொள்ளவே உதயநிதியை விமர்சித்து பதிவிட்டு உள்ளார் என பலரும் கூறுகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!