ஜனவரியுடன் சீனாவின் ஆட்டம் க்ளோஸ்... அறிவுஜீவிகள் ஜம்பம் பலிக்காது... கொக்கரிக்கும் ஹெச்.ராஜா..!

Published : Jul 02, 2020, 10:43 AM IST
ஜனவரியுடன் சீனாவின் ஆட்டம் க்ளோஸ்... அறிவுஜீவிகள் ஜம்பம் பலிக்காது... கொக்கரிக்கும் ஹெச்.ராஜா..!

சுருக்கம்

இந்தியா இன்று தன்னிறைவை நோக்கி செல்வதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.  

இந்தியா இன்று தன்னிறைவை நோக்கி செல்வதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சீனா- இந்தியா எல்லை மோதலால் லடாக் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது வரை அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இதனையடுத்து டிக்டோக், ஹெல்லோ ஆப் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளை இந்திய அரசு தடை செய்ய உத்தரவிட்டது. 

 இருப்பினும், சீனப்பொருட்களை தவிர்த்தால் இந்தியா பாதிக்கப்படும் என பலரும் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, ‘’சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றால் பல அறிவுஜீவிகள் இந்தியா பாதிக்கும் என வாதிடுகின்றனர். ஆனால், PPE,N95 மாஸ்க், ராபிட் டெஸ்ட் கிட் ஆகியவை ஜனவரி மாதம் வரை இந்தியாவில் இவை தயாரிக்கப் படவில்லை. ஆனால், இன்று தன்னிறைவை நோக்கி. எனவே முடிவெடுப்போம் முன்னேறுவோம் என்பதே சரி’’ எனக் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி