இந்திய எல்லைக்குள் சீனா உடுருவி 7வாரம் ஆச்சு.. இப்படியொரு பிரதமர் ஜனாதிபதி எங்குமே இல்லை.. ப.சிதம்பரம் தாக்கு

Published : Jun 17, 2020, 08:39 AM ISTUpdated : Jun 24, 2020, 03:40 PM IST
இந்திய எல்லைக்குள் சீனா உடுருவி 7வாரம் ஆச்சு.. இப்படியொரு பிரதமர் ஜனாதிபதி எங்குமே இல்லை.. ப.சிதம்பரம் தாக்கு

சுருக்கம்

சீனா ராணுவ வீரர்கள் கல் இரும்பு பைப் கொண்டு இந்திய ராணுவ வீரர்களை தாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இதுவரைக்கும் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அரசு அதிகாரபூர்வமாக ஏன் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.  


​சீனா ராணுவ வீரர்கள் கல் இரும்பு பைப் கொண்டு இந்திய ராணுவ வீரர்களை தாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இதுவரைக்கும் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அரசு அதிகாரபூர்வமாக ஏன் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சீனாவுடனான மோதலில் எத்தனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை அரசு அதிகார பூர்வமாக இன்னும் எத்தனை பேர் என்று தெரியவில்லை.உயிரிழந்தவர்கள் எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?சீனத் ராணுவ வீரர்கள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.இது போன்று வாய் திறக்காத பிரதமரோ? ஜனாதிபதியோ? உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?"இதனிடையே, இந்தியத் தரப்பில் 20 வீரர்களும், சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாகவே மேற்கோள்காட்டி தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. என்கிறார் மன வேதனையுடன்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!