
லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் என்றும்;சீனா வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் சீனாவோ இந்தியாவே அதிகாரப்பூர்வமாக எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்று அறிவிக்க வில்லை. கொரோனா போரை அடுத்து சீனா அடுத்ததாக இந்தியாவிடம் சண்டியர்தனம் காட்ட ஆரம்பித்து விட்டது. உலக நாடுகள் பொருளாதாரத்தில் நிலைகுலைந்து போய் இருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவை அட்டாக் செய்து எல்லையை விரிவுபடுத்தி விடலாம் என்று சீனா கனவு கண்டிருக்கிறது. அது பழிக்குமா? பழிக்காதா என்பது பிரதமர் மோடியின் கையில்தான் இருக்கிறது.
சமாதானம் பேசிக்கொண்டிருக்கும் போது முதுக்கு பின்னால் சண்டையை தூண்டி விடும் சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு இந்தியரின் கோபமாக வேண்டுகோளாக இருக்கிறது.இந்த நிலையில்..
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதல்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளையும் நிதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க இரு தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இரு நாடுகளும் நிலைமையைக் குறைப்பதில் ஈடுபட்டுள்ளன என்ற அறிக்கைகளை நாங்கள் சாதகமாகக் கவனிக்கிறோம்.திங்களன்று ஏற்பட்ட மோதல்கள், எந்த துப்பாக்கிகளும் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுவது, 1962 ஆம் ஆண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான மோதலாகும்.கிழக்கு லடாக்கில் யில் நேற்று இரவு நடந்த மோதலில் 16 பீகார் படைப்பிரிவின் கர்னல் பி. சந்தோஷ் பாபு மற்றும் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும், 20 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் பின்னர் வெளிப்படுத்தியது.இந்தியாவைப் போல், சீனா அங்கு உயிரிழப்புகளை சந்தித்திருந்தால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.