கொரோனா கிளப் தொடங்கி பட்டையை கிளப்பும் முதல்வர் .! குஷியில் கொரோனா பயனாளிகள்.!!

By T BalamurukanFirst Published Jul 15, 2020, 7:50 PM IST
Highlights

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலைல் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புதுபுது திட்டங்களை கொரோனா பாதித்த மக்களுக்கு தொடங்கி வருகிறார். அதன்படி மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் "கொரோனா வாரியர் கிளப்" ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார்.
 
அந்தகிளப் முழுக்க முழுக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும்,ஆரோக்கியத்திற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிளப் அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர்கள் மட்டுமே இந்த கிளப்பில் உறுப்பினராக முடியும்.அதன்படி முதல்கட்டமாக இந்த கிளப்பில் 60 பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.இந்த கிளப் ஜுன் மாதம் முதல்வர் மம்தா பானர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது.

உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு, தங்குமிடத்திற்கான செலவையும்  அரசு ஏற்றது.  இதுபோன்ற கிளப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு மனநல ஆலோசனை கூட்டங்களையும் மேற்கு வங்காள அரசு நடத்துகிறது. கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் உயிரிழந்தால் அந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

click me!