எடப்பாடியாரை ஏற்க முடியாது? முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும்.. வானதி சீனிவாசன் சரவெடி..!

By vinoth kumarFirst Published Oct 9, 2020, 3:05 PM IST
Highlights

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவரை ஏற்பது குறித்து டெல்லி பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவரை ஏற்பது குறித்து டெல்லி பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

அதிமுகவில் முதல்வர் யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, ஒருவழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கவேண்டும் என்று இருவரும் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டணி கட்சியான பாஜக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக தங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் அறிவித்திருப்பதால் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நேற்று முன்தினம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில் கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க வேண்டிய விஷயம். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாஜவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம், திமுகவாக இருக்கலாம் என்றார். 

அதேபோல், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறுகையில்;- சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக- கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 2016 ல் தனித்துப் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்ததாகவும், இந்த முறையும் பெருவாரியாக நிர்ணயிக்கும் என்றார்.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன்;-பாஜக ஏற்கனவே திமுக., அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் இருக்கிறது. எதிர்காலத்தில், பாஜக தலைமையில் கூட கூட்டணி அமையலாம். கூட்டணி விஷயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதேவேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? என்பதை எங்களின் தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்தடுத்து பாஜக தலைவர் இதுபோல கூறிவருவது அதிமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!