மூன்று மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்..! என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Nov 28, 2022, 8:52 AM IST
Highlights

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் தமிழுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று திட்டங்களை தொடங்கிவைத்தும், முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் வருகிறார். அந்த வகையில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளின் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு திருச்சி விமான நிலையதிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்படும் முதல்வர், திருச்சி காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சக்கரங்களில் அறிவியல் என்ற நிகழ்ச்சியினை காலை 10.30.. மணிக்கு துவக்கி வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கேஎன்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தவறான பாதையில் பயணிக்கும் திமுக..! தமிழகத்தில் 5000 இடங்களில் போராட்டம் நடத்த இலக்கு - அண்ணாமலை உறுதி

இதனை தொடர்ந்து அங்கிருந்து மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெரம்பலூருக்கு வரும் முதலமைச்சர், வேப்பந்தட்டை  தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து இன்று  மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதன் பின்னர் அவர் அரியலூர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். மறுநாள் காலை 9.15 மணிக்கு அரியலூர் விருந் தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொல்லாபுரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

திமுகவினரை பார்த்து பயப்படும் நிலையில் முதல்வர்.. போற போக்கில் வாரிசு அரசியலை விளாசிய கடம்பூர் ராஜூ..!

 அங்கு அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார் பில் மேற்கொள்ளப்பட வுள்ள 3புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டிகிறார். 51முடிவுற்ற திட்டப் பணி களை திறந்து வைக்கிறார். மேலும் 27,070 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில்   221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான 23 முடிவுற்ற திட்ட பணிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து 9621 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அந்த நிகழ்ச் சியை முடித்துக்கொண்டு காலை 10.45 மணியளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமானநிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். மதியம் 12.30 மணிக்குசெல் லும் விமானத்தில் சென் னைக்கு புறப்பட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்

அமைச்சரவையில் மாற்றமா..? உதயநிதிக்கு வாய்ப்பா..? மா. சுப்பிரமணியன் கூறிய புதிய தகவல்

click me!