கலைஞர் கோட்டம் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்...! முதலில் இதை கவனியுங்கள்... 4 அமைச்சர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

By Ajmal Khan  |  First Published Jun 20, 2023, 12:15 PM IST

சென்னை மழை பாதிப்புகளை ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க நான்கு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் மழை பாதிப்பு

சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனையடுத்து மழை பாதிப்புகளை சரி செய்ய 2000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தநிலையில்  சென்னை கேகே நகர் பகுதியில் அமைச்சர் மா சுப்பிரமணியனுடன் இணைந்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Tap to resize

Latest Videos

இதன் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், இரண்டு நாட்கள் பெய்த மழையில் சென்னை சாலைகளில் மழை தேங்காமல் இருப்பதை பார்த்த சென்னை மக்கள் தமிழக அரசையும் முதல்வரையும் பாராட்டி வருகின்றனர்.  கடந்த ஆட்சி காலத்தில் மழை பெய்த போது நாம் தற்போது நின்று கொண்டிருக்கிற இந்த பகுதியில் படகில் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

 முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மழைநீர் வடிகால் அமைப்பு பணி பெருமளவு நிறைவடைந்ததால்  தற்போது நீர் தேங்க வில்லை. பத்து ஆண்டுகளில் அதிமுகவினர் இந்த பணியை செய்திருந்தால் நமக்கு இந்த வேலை இருந்திருக்காது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த பணி நடைபெற வேண்டும் என விட்டு சென்றார்கள். அதேபோல நாமும் இந்த பணி சிறப்பாக முடித்துள்ளோம். சென்னை மழை  பாதிப்புகளை கண்காணித்து ஆய்வு செய்வதற்கு நான்கு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மா. சுபிரமணியன், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு ஆகிய நான்கு  அமைச்சர்கள் மழை  பாதிப்புகளை ஆய்வு செய்து உடனுக்குடன் முதலமைச்சருக்கு தெரிவிப்பார்கள் என கூறினார். 

சென்னையிலையே இருங்கள்

கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை மட்டுமல்ல எவ்வளவு மழை பெய்தாலும் ஐந்து நிமிடத்திற்கு மேல் சாலையில் நீர் தேங்காத வண்ணம் பணிகள் நடந்து முடிந்திருக்கின்றன பருவமழை எதிர்கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே  முன்னெச்சரிக்கை முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வருகிறோம். மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 70 முதல் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சென்னை சேர்ந்த அமைச்சர்கள் மாசு சேகர் பாகுபலி தெரிந்து வைத்துள்ளார்கள் எனவே விரைந்து அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது சென்னைக்கு மறுவாழ்வு கிடைக்கும் என கூறினார். இதனிடையே திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மழை பாதிப்புகளை சரி செய்த அந்த 4 அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள

கலைஞர் கோட்டம் இன்று திறப்பு: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்!
 

click me!