செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! என்ன சொன்னார் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jun 14, 2023, 11:28 AM IST

அமலாக்கத்துறை விசாரணையின் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்து, உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.


மருத்துவமனையில் செந்தில் பாலாஜி

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட மோசடி வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்ற போது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து உடனடியாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு,

Tap to resize

Latest Videos

யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை...

செந்தில் பாலாஜியை சந்தித்த முதலமைச்சர்

மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் செந்தில் பாலாஜியை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர். அப்போது அமலாக்கத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது பாஜக அரசின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்து பார்த்த புகைப்படத்தை தனது முகநூலில் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் செந்தில் பாலாஜி தோளில் கை வைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது… pic.twitter.com/D2EIs5vvWN

— M.K.Stalin (@mkstalin)

 

பாஜக அரசுக்கு கண்டனம்

அப்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் உடையில் உள்ளார்.  தொடர்ந்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில குறிப்பிடுகையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.  2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது..! தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- ஸ்டாலின் எச்சரிக்கை

click me!