ஒற்றை அறிவிப்பில் அண்ணாமலையை சலாம்போட வைத்த முதல்வர் ஸ்டாலின்.. பிரச்சனை ஓவர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 5:12 PM IST
Highlights

நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் ஏற்று வழிபாட்டு தளங்களை திறக்க முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்,

கோயில்கள் திறக்கப்படும் என்ற தமிழக முதலமைச்சரின் நல்ல முடிவை வரவேற்கிறோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நவராத்திரி காலமென்பதால் மக்கள் கோயிலுக்கு அதிகம் செல்ல விரும்புவர், அதை உணர்ந்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கதக்கது என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. 

தமிழ்நாட்டில்  கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு  நீட்டிப்பது குறித்தும் மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது, அரசியல் கூட்டங்கள் நடத்துவது, சமுதாய  கூடங்களை திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் முடிவில் ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தடையை நீக்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: என் தந்தை உட்பட 28 ஆண்கள் என்னுடன் உடலுறவு கொண்டுள்ளனர்.. போலீசை நடுங்க வைத்த 17 வயது பெண்.

அதாவது திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தேதிகளில் மட்டுமே கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய நாட்களில் அதிக மக்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், திட்டமிட்டு திமுக அதை தடுக்கிறது என்றும், அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதே போல ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய கலாசார நிகழ்வுகளுக்கு தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அதிமுக போட்டது தப்புக்கணக்கு. எதிர் கட்சி என்ற குறைந்த பட்ச மரியாதை கூட மக்கள் தரல.. பங்கம் செய்த ஸ்டாலின்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் ஏற்று வழிபாட்டு தளங்களை திறக்க முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார், தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை பாஜக வரவேற்கிறது, நவராத்திரி காலமென்பதால் மக்கள் கோயிலுக்கு அதிகம் செல்ல விரும்புவர், அதை உணர்ந்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கதக்கது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றிகள் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
 

click me!