புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது.!நான் சாதாரண ஸ்டாலின் இல்லை.! முதலமைச்சர் அதிரடி

By Ajmal KhanFirst Published Dec 11, 2022, 1:44 PM IST
Highlights

மாண்டஸ் புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளத்திலும் தொலைபேசியிலும் தொடர்ந்து பாராட்டுகிறார்கள்.  நம்பர் 1 முதலமைச்சர் என்பதை நான் பெருமையாகவோ, பாராட்டாகவோ நினைக்கவில்லை நம்பர் 1 தமிழ்நாடு என்று எப்போது சொல்கிறார்களா அது தான் எனக்கு பாராட்டாக நினைக்கிறேன். அதையும் நிறைவேற்றுவேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு இல்ல திருமண விழாவை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து  திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு போன்றோரின் உழைப்பால் திமுக இயக்கம் கம்பீரமாக இருப்பதாக தெரிவித்தார். எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாத அளவுக்கு செயல்படுவதாகவும் கூறினார்.  தமிழகத்தில் இப்போதைய ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருகிறது.

இரட்டை மாட்டு வண்டி போட்டி..! சீறிப்பாய்ந்த மாடுகள்..! உற்சாகமடைந்த பொதுமக்கள்

புயலையே சந்திக்கும் திராவிட மாடல் ஆட்சி

புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை இரண்டு நாட்களாக பார்ப்பவர்கள் எல்லாம் பாராட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது கொடிய நோயான கொரோனாவில் இருந்து மீண்டு தற்போது  புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. இது தான் கலைஞர் சொன்ன உழைப்பு,உழைப்பு,உழைப்பு என தெரிவித்தார். நேற்றிலிருந்து போனை வைக்க முடியவில்லை அந்த அளவுக்கு மாண்டஸ் புயலுக்கு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டுகிறார்கள்,சமூக வலைத்தளத்திலும் பாராட்டுகிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, நீக்க 23 லட்சம் பேர் விண்ணப்பம்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நம்பர் 1 தமிழகம் ஆக்குவதே லட்சியம்

நம்பர் 1 முதலமைச்சர் என்பதை நான் பெருமையாகவோ, பாராட்டாகவோ நினைக்கவில்லை நம்பர் 1 தமிழ்நாடு என்று எப்போது சொல்கிறார்களா அது தான் எனக்கு பாராட்டாக நினைக்கிறேன். அதையும் நிறைவேற்றுவேன் இந்த ஸ்டாலின்.நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், குடும்ப கட்டுப்பாட்டிற்காக மத்திய ,மாநில அரசு நிறைய நிதியை செலவு செய்கிறது. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை இப்பொழுது நாம் இருவர்  நமக்கு ஒருவர் என்று இருக்கிறது வரும் காலங்களில் நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்று  கூட வரலாம். ஆனால் தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு  தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த இல்லம்..! நினைவு இல்லமாக மாற்றிய தமிழக அரசு- திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
 

click me!