துபாயில் கோட் சூட்டில் கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்.. அட டோட்டலா ஸ்டைலே மாறிப்போச்சு..!

Published : Mar 25, 2022, 08:27 AM ISTUpdated : Mar 25, 2022, 09:44 AM IST
துபாயில் கோட் சூட்டில் கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்.. அட டோட்டலா ஸ்டைலே மாறிப்போச்சு..!

சுருக்கம்

சர்வதேச கண்காட்சி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இது 6 மாதங்கள் நடத்தப்படும். தற்போது துபாயில் நடக்கும் கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் சர்வதேச கண்காட்சியாகும். கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி, மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது.

எந்நேரமும் வெள்ளை வேஷ்டி சட்டையில் அதிக நேரம் காணப்படும் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது துபாய் பயணத்தின் போது ஸ்டைலாக கோர்ட் சூட் அணிந்து கெத்தாக நடந்து வரும் காட்சிகள் வைரலாகி வருகிறது. 

சர்வதேச கண்காட்சி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இது 6 மாதங்கள் நடத்தப்படும். தற்போது துபாயில் நடக்கும் கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் சர்வதேச கண்காட்சியாகும். கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி, மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது.

இதில் உள்ள தமிழக அரங்கில், மார்ச் 25 முதல் 31-ம் தேதி வரை ‘தமிழ்நாடு வாரம்’ அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகத்துக்கு எடுத்துக் காட்டும் விதமாக காட்சிப் படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படுகிறது.

இதுதவிர, தமிழகத்தில் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் சாதனங் கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மாதிரிகளும் இந்த அரங்கில் காட்சிப் படுத்தப்படுகின்றன. கண்காட்சி அரங்கை திறந்து வைக்கவும், முதலீட்டாளர்களை சந்திக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஸ்டாலினுடன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டவர்களும் சென்றனர்.

துபாய் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை இந்திய துணை தூதர் டாக்டர் அமன் புரி வரவேற்றார். ஏராளமான வெளிநாடுவாழ் தமிழர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ வாகனத்தில் அவர் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும், துபாயில் எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் அதிகாரிகளும் முதலமைச்சரை நேரில் வந்து சந்தித்தனர். 

இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு துபாயில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, முதல்வர் ஸ்டாலின் கோர்ட் சூட் அணிந்து, பிளாக் கலர் ஷூ அணிந்து கொண்டு கெத்தாக நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!