நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதுவையில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவிற்கு புதுவை தொகுதி
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், பாஜக சார்பாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சவார்த்தையும் ஒருபக்கம் நடைபெற்ற வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்றுள்ள பாஜக தங்களுக்கு புதுவையை ஒதுக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாஜக மேலிட தலைவர்களும் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
வேட்பாளர் யார்.?
இந்தநிலையில் புதுவை மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுவை முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து புதுவையில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது அந்த மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் களம் இறக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது. அதில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.