கன்னியாகுமரி மக்களவை தொகுதி! பாஜக வேட்பாளராக களமிறங்கும் விஜயதரணி? கழற்றிவிடப்பட்ட பொன்னார்?

By vinoth kumar  |  First Published Mar 3, 2024, 7:44 AM IST

இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. இந்த தொகுதி எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கடந்த முறை பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார். 


விளாத்திகுளம் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜக ஐக்கியமான நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. இந்த தொகுதி எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கடந்த முறை பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார். 2019ம் ஆண்டு  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் வெற்றி பெற்றார். பின்னர் அவரது மறைவைத் அடுத்து 2021-ல் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவில் போட்டியிட பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி தலைவர்கள் மூலம் முயன்று வருகிறார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: பாஜகவை கழற்றிவிட்டு அதிமுகவுடன் புதிய தமிழகம் கூட்டணி? என்ன காரணம் தெரியுமா?

ஆனால் நீங்கள் போட்டியிட வேண்டாம் என்று பொன்.ராதாகிருஷ்ணனை தேசிய தலைமை அறிவுறுத்தியதாகவும், அவருக்கு  ஆளுநர் பதவியை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு ஆளுநர் வாய்ப்பு வந்தபோதெல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனின் பெயர் பேசப்பட்டு வருவதும் இறுதியில் மாறுவதுமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அப்படி இருக்காது என நம்ம தகுந்த வட்டாரத்தில் அடித்து கூறப்படுகிறது. 

அப்படினா கன்னியாகுமரி பாஜக சார்பில் நிற்க போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்த நிலையில் கட்சி தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு சமீபத்தில் விளாத்திகுளம் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ஆகையால் அவரே கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:  அதிமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்.! குஷியில் இபிஎஸ்.! அதிர்ச்சியில் பிரேமலதா!

இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அங்கு வேட்பாளராக விஜய் வசந்த் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. விஜய் வசந்த், விஜயதரணி இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயதரணி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!