காவல்துறை மரியாதையோடு அவ்வை நடராஜனுக்கு இறுதி அஞ்சலி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

By Ajmal KhanFirst Published Nov 22, 2022, 10:34 AM IST
Highlights

உடல்நலக்குறைவால் காலமாண தமிழறிஞர் ஔவை நடராசனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அவ்வை நடராஜன் காலமானார்

தமிழறிஞர் ஔவை நடராசன் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை உயிர் இழந்தார். அவரது மறைவிற்கு இலங்கல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிகைகயில், தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகள் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமது தமிழ்ப் பணிகளுக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை ஔவை நடராசன் அவர்கள் பெற்றிருந்தார்.

அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. குடும்பத்தினருக்கும் ஆறுதல்..!

காவல்துறை மரியாதையோடு அஞ்சலி

எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை ஔவை நடராசன் அவர்களின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக அரசு சார்பாக வெளியிட்ட அறிக்கையில், மூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் (87) அவர்கள் அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெருந்தகை ஒளவை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பாஜக பெண் தலைவருக்கு ஆபாச அர்ச்சனை..! கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா- அதிர்ச்சியில் அண்ணாமலை

click me!