முதல்வரை பார்க்க அனுமதிக்காத டாணாக்காரர்கள்..ட்விட்டரில் பொங்கிய பாலபாரதியை கூல் செய்த மு.க ஸ்டாலின்

By Raghupati RFirst Published May 1, 2022, 12:05 PM IST
Highlights

கடைசிவரை முதல்வரை சந்திக்க முடியவில்லை. அதனால்தான் டுவிட்டர் பக்கத்தில் எங்களது கோபத்தை, திண்டுக்கல் வருகைபுரிந்த தமிழகமுதலமைச்சர்அவர்களை சந்திப்பதற்கு எத்தனைமுயற்சிசெய்தும் முடியவில்லை. டாணாக்காரர்கள் நடத்தியநாடகம் சுவராசியமானது.

தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ட்விட்டரில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி போர் நடத்தி வருகிறார்.  அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது அவரை நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை மனுவாக கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி மற்றும் சிலர் விழா மேடைக்கு சென்றுள்ளனர். 

ஆனால் அவர்கள் முதலமைச்சரை சந்திக்கவிடாமல் பல்வேறு இடங்களுக்கு அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள்  எம்.எல்.ஏ பாலபாரதி கூறியதாவது, ‘எங்களை சந்திக்கும் ஏழைதாய்மார்கள் தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்கு முதலமைச்சரின் கவனத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள சில அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் மக்கள் எங்களிடம் புகாராக கூறினர். 

அதனை முதல்வரின் கவனத்திற்கு மனுவாக கொடுக்கச் சென்றோம். ஆனால் காவல்துறை அதிகாரிகள் முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை.  இதனால் கடைசிவரை முதல்வரை சந்திக்க முடியவில்லை. அதனால்தான் டுவிட்டர் பக்கத்தில் எங்களது கோபத்தை, திண்டுக்கல் வருகைபுரிந்த தமிழகமுதலமைச்சர்அவர்களை சந்திப்பதற்கு எத்தனைமுயற்சிசெய்தும் முடியவில்லை. டாணாக்காரர்கள் நடத்தியநாடகம் சுவராசியமானது. ஏப்பா எங்ககிட்டயேவா. என பதிவு செய்தேன் என்றார்.

மேலும், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஏற்கனவே பாஜக வழக்கறிஞர்கள் மீது கொலை முயற்சி மேற்கொண்டதாக பொய் புகார் ஒன்றினை பெற்று வழக்கு பதிவு செய்தவர் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பாலபாரதி. ஏற்கனவே, காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வருவதால், முதல்வர் அவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலபாரதி வெளியிட்ட மற்றொரு பதிவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசியது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கியது.நன்றியும்வாழ்த்துகளும்.. என கூறியுள்ளார். ஒரு சிலர் வழக்கம் சில விமர்சனங்களையும் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சீற்றத்துடன் எழுதிய பதிவை மட்டும் பாலபாரதி நீக்கிவிட்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

இதையும் படிங்க : முஸ்லீம் கடையில் டீ குடிக்காதீங்க.. ஆண்மைக்குறைவு ஏற்படும் - சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ !!

இதையும் படிங்க : பாஜகவை ஜெயிக்க ஒரு வழிதான் இருக்கு..3வது அணிக்கு வாய்ப்பில்ல ராஜா.. பி.கே சொன்ன மாஸ்டர் பிளான் !

click me!