MK Stalin: முதல்வர் மு.க.ஸ்டாலின் சரித்திர சாதனை படைத்துள்ளார்.. புகழேந்தி புகழாரம்.. எதற்கு தெரியுமா?

Published : Jan 18, 2022, 07:15 AM IST
MK Stalin: முதல்வர் மு.க.ஸ்டாலின் சரித்திர சாதனை படைத்துள்ளார்.. புகழேந்தி புகழாரம்.. எதற்கு தெரியுமா?

சுருக்கம்

நாவலருக்கு திமுக சிலை எடுக்கிறது. ஆனால் நாவலருக்கு சிலை எடுக்க வேண்டியவர்கள் யார்?  திராவிட இயக்க வரலாறுகளில் எம்ஜிஆரும், கலைஞரும், நாவலரும், மற்றவர்களும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தங்களை நினைத்து வாழ்ந்து இருக்கிறார்கள். பிரதமர் மோடி பெயரளவில் தமிழ் பேசுகிறார். 

பிரதமர் மோடி பெயரளவில் தமிழ் பேசுகிறார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு நிமிடங்கள் தமிழில் பேசும் பிரதமர், தமிழக அரசின் ஊர்தியை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். 

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு, கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;-  தமிழகத்தில் கருத்து வேறுபாடுகளை களைந்து, எம்ஜிஆரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சரித்திர சாதனை படைத்துள்ளார். ஆனால், எம்ஜிஆருக்கு யார் விழா எடுத்திருக்க வேண்டுமோ அவர்கள் விழா எடுக்கவில்லை. 

நாவலருக்கு திமுக சிலை எடுக்கிறது. ஆனால் நாவலருக்கு சிலை எடுக்க வேண்டியவர்கள் யார்?  திராவிட இயக்க வரலாறுகளில் எம்ஜிஆரும், கலைஞரும், நாவலரும், மற்றவர்களும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தங்களை நினைத்து வாழ்ந்து இருக்கிறார்கள். பிரதமர் மோடி பெயரளவில் தமிழ் பேசுகிறார். 

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு நிமிடங்கள் தமிழில் பேசும் பிரதமர், தமிழக அரசின் ஊர்தியை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. பாரதியின் கருத்துக்களை ஒப்புக் கொண்ட மோடி, அரசின் ஊர்தியை குடியரசு தினவிழாவில் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது  என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே திமுக ஆதரவாகவும், முதல்வர் ஸ்டாலின் புகழ்பாடுவதையே புகழேந்தி வாடிக்கையாக கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!