தமிழகத்தின் வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்

By Raghupati R  |  First Published Jun 6, 2023, 8:48 PM IST

தலை நிமிர்ந்து கொள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருப்பவருக்கு தெரியவில்லை. ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.


சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள விஜயராகவா சாலையில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்  500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது விழாவில் பேசிய அவர், “தலை நிமிர்ந்து கொள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருப்பவருக்கு தெரியவில்லை. ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் அரசுக்கு உதவியாக இருக்கும்.

Tap to resize

Latest Videos

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொழில்துறை நிகழ்ச்சிகளில் தான் அதிகம் பங்கேற்று உள்ளேன். தொழில்துறை மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது தீவிரமாக இருந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தினோம். இந்திய அளவில் சிறந்த சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதை ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி உலக சுகாதார அமைப்பை கட்டுரை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மிக பெரும் பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கு தெரியவில்லை. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பது ஆளுநர் ரவிக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை தற்போது அனைவருமே போற்றுகிறார்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுரையை ஆளுநர் படித்துப் பார்க்க வேண்டும்.

நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 355 பேருக்கு சிகிச்சை தர ரூபாய் 145 கோடி செலவிடப்பட்டுள்ளது.தினம்தோறும் மக்களை குழப்பும் வகையில் ஆளுநர் ஏதாவது ஒன்றை பேசி வருகிறார்” என்று தெரிவித்தார்.   ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று, முதலீடுகளை ஈர்பதற்காக சென்ற முதலமைச்சரின் வெளிநாட்டு  பயணத்தை மறைமுகமாக விமர்சித்திருந்தார். தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கு மறைமுகாக பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநருக்கும், முதல்வருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 150 கேமராக்கள்.! இனி பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அவ்வளவுதான்

click me!