துணைவேந்தர் மாநாட்டை அரசியல் மாநாடாக மாற்றிய ஆளுநர்.! முழு நேர அரசியல் வாதியாகவே மாறிவிட்டார்- தங்கம் தென்னரசு

By Ajmal Khan  |  First Published Jun 6, 2023, 3:30 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். சீனா, ஜப்பான் தைவான், உள்ளிட்ட பல நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். எனவே ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என தங்கம் தென்னரசு விமர்சித்தார். 
 


முதலமைச்சர் வெளிநாடு பயணம்

முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து தமிழக ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசியிருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் பேச்சு மட்டுமின்றி சமீப காலமாக ஆளுநரின் பேச்சுக்கள் அவர் முழு அரசியல்வாதி போலவே உள்ளன.

Tap to resize

Latest Videos

துணைவேந்தர்கள் மாநாடு

சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநர் கூறியதற்கு மாறாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், அதில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி. தன்னை முழு அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டுள்ளார்; உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டை, ஆளுநர் தனது அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டை தமிழகம் என அவர் மாற்ற மேற்கொண்ட முயற்சிகள், திராவிட நாடு என்ற ஒன்று கிடையாது என அதற்கு எதிராக ஆளுநரின் பேச்சுக்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக இருந்து வந்தது. தற்போது தொழில் முதலீடுகளை இருப்பதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட பயணங்களை மறைமுகமாக சாட்டியிருப்பது போல் அவரது பேச்சுக்கள் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் சிறந்த கல்லூரி

முதலீடுக்கான வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்து ஆளுநர் பேசுவது ஏற்றுகொள்ளமுடியாது என கூறினார்.  தமிழகத்தில் கல்வியின் தரம் சரியல்ல என குற்றம் சாட்டி வரும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன எனவும் சிறந்த 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சமீபத்தில் நிதி ஆயோக் வெளியீட்டுல அறிக்கையில் கூட தமிழகத்தில் சிறந்த கல்வி தரம் இருப்பதாகவும் மேலும் மேற்கண்ட பட்டியலில் தமிழகம் முன்னணி இடம் வகிப்பதற்கு தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் காரணம் என தெரிவித்தார். இவற்றை மறைப்பது போல தமிழக ஆளுநர் பேச்சுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மோடி வெளிநாடு சென்றது ஏன்.?

வெளிநாட்டு பயணங்களை தமிழக முதலமைச்சர் மட்டுமா மேற்கொண்டுள்ளார்..? பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். சீனா, ஜப்பான் தைவான், உள்ளிட்ட பல நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என்றும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதற்கு பாஜக தான் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். முதலீட்டுக்கு உகந்த சூழல் தமிழகத்தில் நிலவுவதாலும் அனைத்து தரவுகளில் அடிப்படையிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும் முதலீடு செய்ய வரக்கூடிய நிறுவனங்கள் தமிழகத்தை விரும்புகின்றன என தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையை அரச்சியலுக்கு பயன்படுத்துவதா.?

தமிழகத்தில் வரக்கூடிய பெரு நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற மனித வளம் மற்றும் திறன்கள் இங்கு உள்ள இளைஞர்களிடம் இருப்பதால் மட்டுமே அவர்கள் தமிழகம் வருவதாகவும் தெரிவித்தார். அரசியலுக்கு செல்ல விருப்பம் இருந்தால் தமிழக ஆளுநர் அதற்கு ஆளுநர் மாளிகையை பயன்படுத்தக்கூடாது எனவும் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வரவேண்டும் என தெரிவித்தார்

இதையும் படியுங்கள்

தமிழக மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர்.!பாஜக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுவதா.? காங்.

click me!