பிரதமர் ஆகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன நெத்தியடி பதில்..

By Raghupati R  |  First Published Oct 29, 2023, 12:09 AM IST

தனியார் செய்தி நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள  பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.


தமிழகத்தில் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாநில அரசுகளுக்கு பெரும் பொருட்செலவு ஆகிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " காலை உணவுத் திட்டமாக இருந்தாலும் சரி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாக இருந்தாலும் சரி, எந்தவொரு மக்கள் நல திட்டமும், எவ்வளவு சவால்கள் நிரம்பி இருந்தாலும்  மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது, எவ்வளவு சவால்கள் இருந்தாலும் சமாளிக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட கடன் சுமை நிதிப் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றைச் சமாளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறை போன்ற சவால்ளை தாண்டி சிறப்பாக செய்து வருகிறோம்" என்றார்.

Latest Videos

undefined

வருங்காலத்தில் பிரதமர் ஆகும் லட்சியம் திமுக தலைவரான உங்களுக்கு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேசிய அரசியலில் திமுக மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்ந்த முத்திரையை பதித்துள்ளது. பிரதமர் இந்திரா காந்தி முதல் மன்மோகன் சிங் ஆட்சி என பல முக்கிய தருணங்களில் திமுக உறுதுணையாக நின்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நெருக்கடி நிலைக் காலத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காத ஜனநாயக உரிமைக்குரலை முன்னெடுத்து, வட இந்திய அரசியல் தலைவர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் முதுகெலும்பாக இருந்தது திமுக. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தி.மு.க.வின் நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்று, வெற்றிகரமாக அமைந்துள்ளன.

தலைவர் கலைஞரின் வழியில், நாட்டின் இன்றையச் சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் தி.மு.க தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர் கலைஞர். மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும்” என்று கூறினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

click me!