உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு.. சிறப்பு அலுவலர் ஷில்பா அதிரடி.

Published : May 20, 2021, 09:27 AM IST
உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு.. சிறப்பு அலுவலர் ஷில்பா அதிரடி.

சுருக்கம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டத்துக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டங்கள் ) மற்றும் மின் மாவட்ட மேலாளர் ஆகியோர்களை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் புதிய துறையை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அத்துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையை செயல்படுத்தும் பொருட்டு , இத்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டத்துக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டங்கள் ) மற்றும் மின் மாவட்ட மேலாளர் ஆகியோர்களை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அலுவலர்கள் தேவைப்படும்பட்சத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் ஒருங்கிணைப்பு குழு அமைத்து குழுவில் இடம்பெற்றுள்ளா அலுவர்களின் பெயர், பதவி, உள்ளிட்ட விவரங்களை utmtamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும் மாவட்ட வாரியாக அந்தந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அந்தந்த அலுவலர்களே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 549 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்