ஒரு நாளைக்கு 10 பிரச்சாரமா?இப்படி ஒரு எனர்ஜியா?! எடப்பாடி டயர்டே ஆகமாட்டாரா?

Published : Mar 19, 2021, 01:49 PM IST
ஒரு நாளைக்கு 10 பிரச்சாரமா?இப்படி ஒரு எனர்ஜியா?! எடப்பாடி டயர்டே ஆகமாட்டாரா?

சுருக்கம்

சட்டமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், நாள் ஒன்றுக்கு  8 முதல்  10 இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி .

சட்டமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், நாள் ஒன்றுக்கு  8 முதல்  10 இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி . மக்களிடம் வாக்கு சேகரிக்க தொகுதி வாரியாக வேட்பாளர்களுடன் சென்று, அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை பற்றி மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்து வருகிறார். அதிமுக வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்க தொகுதிக்கு நான்கு  இடங்கள் என்ற கணக்கில் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

கடும் வெயிலிலும் கூட வேட்பாளர்களுக்காக களத்தில் இறங்கி தீவிரமான சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்து, செய்த திட்டங்களை எடுத்துரைப்பது என்பது கட்சிகளின் பிரச்சார உத்தியாக உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் தினமும் சுமார் 10 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு அனைத்து மக்களிடமும் அதிமுகவின் திட்டங்களை சென்றடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சரின் இந்த தேர்தல் பிரச்சார உத்தி அ.தி.மு.க கூட்டணிக்கு பலமாக அமைந்துள்ளது. 

மறுபுறம், திமுக தலைவர்  ஒரு நாளைக்கு 2 முதல் 4 தொகுதிகள் வரை சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். ஒரு மாவட்டத்தில் இரண்டு இடங்களை தேர்ந்தெடுத்து, அந்த மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை இரண்டாக பிரித்து அனைத்து வேட்பாளர்களையும் ஒரே இடத்திற்கு வர வைத்து சிரமம்   இல்லாமல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். வேட்பாளர்களை  கொத்து கொத்தாக அழைத்து மொத்தமாக தேர்தல் பிரச்சாரங்களை வருகிறார். “வெயிலில் சென்றால் கருத்து விடுவாராம்” என்று திமுகவினரே முனுமுனுக்கும் படி திமுகவின் நிலைமை தற்போது உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். 

காலநிலையை கூட கருத்திற்கொள்ளாமல், நாளுக்கு 10 இடங்கள் சென்று அதிமுகவின் வேட்பாளர்களுடன் சேர்ந்து கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் சமமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம். தோல் கறுத்து விடுமோ அல்லது விக்கு கழண்டு விடுமோ என்ற பதபதப்பில் ஒரு நாளுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே செல்லும் திமுக தலைவரை ஒப்பிடும் போது மக்களை சந்திக்க முழு ஈடுபாடும் பங்களிப்பும் அளிப்பது யார் என்று வெளிப்படையாக தெரிகிறது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாவட்டந்தோறும் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் புயல், வெள்ளம் சமயங்களிலும் மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, தற்போது ஒய்வு ஏதும் இல்லாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மக்களின் முதல்வர் என்று அனைவரும் அழைப்பதற்கேற்ற முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வில்லாமல் களப்பணியில் ஈடுபட்டு  வருவதாக பொது மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்க்கும், எனக்கும் வெறும் பங்காளி சண்டை தான்..! மீண்டும் அதிமுக கூட்டணியில் அமமுக.. டிடிவி பளீர்..
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..!