
தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஓகி புயலால் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளனர். மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படை ஆகியவை இணைந்து ஈடுபட்டுள்ளன.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் ஏற்கனவே மீனவ குடும்பங்கள் தவித்து வருகின்றன. கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இதனிடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பருத்தித்துறை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்கள் 20 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர்,
இந்நிலையில், கடலில் தத்தளிக்கு மீனவர்களை மீட்கும் பணிகளில் கடற்படை, ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்க வேண்டும்எனவும் கடலோர காவல்படையை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.