
உலகம் சுற்றும் வாலிபன்’ படம் தடைகளை தாண்டி தூத்துக்குடியில் திரையிடப்பட்டது என்றும் போஸ்டர்கள் ஒட்டப்படாமலேயே மாபெரும் வெற்றியை எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் பெற்றது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்ட பெருமைகளை விளக்கினார். சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோர் பிறந்த மண் தூத்துக்குடி என்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் தூத்துக்குடியில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் தடைகளை தாண்டி தூத்துக்குடியில் திரையிடப்பட்டது என்றும் போஸ்டர்கள் ஒட்டப்படாமலேயே மாபெரும் வெற்றியை எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் பெற்றது என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.