கொரோனா பரிசோதனை செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி... வெளியானது முடிவுகள்..!

By vinoth kumarFirst Published Jul 14, 2020, 9:21 AM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில்  தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில்  தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய  உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக கொரோனா தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 8-ம் தேதி மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, அமைச்சர் பி.தங்கமணி 7-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதற்கு முந்தைய நாள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். எனவே, அமைச்சர் பி.தங்கமணியை சந்தித்தவர்கள் எல்லாம் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், முதல்வரின் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. அதேபோல், முதல்வரின் முகாம் ஊழியர்களுக்கும் பாதிப்பு இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!