தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் .! எப்போது நடைபெறும்.. தேர்தல் தலைமை ஆணையர் விளக்கம்

By T BalamurukanFirst Published Jul 14, 2020, 9:07 AM IST
Highlights

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல்தன பொதுத் தேர்தலோடு நடத்தப்படுமா? இல்லை தனியாக நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல்தன பொதுத் தேர்தலோடு நடத்தப்படுமா? இல்லை தனியாக நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

 தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூா், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகள் காலியாகவுள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்தும் திமுக வெற்றி பெற்ற தொகுதிகளாகும்.அன்பழகன் கொரோனாதொற்றால் உயிரிழந்தார்.மேலும்  மூன்று பேரும் உடல் நலக்குறைவு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததால், அவா்கள் சார்ந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 தமிழகத்தில் இப்போதுள்ள 15-வது சட்டப் பேரவை ஜெயலலிதா முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆட்சி காலம் நிறைவடைய ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ளது.தேர்தல் ஆணையம் பொதுத் தோ்தலை நடத்துவதற்கான கால அளவு ஓராண்டுக்குள் இருக்கும்பட்சத்தில், அந்த கால இடைவெளியில் ஏதேனும் தொகுதிகள் காலியானால் அவற்றுக்கு பொதுவாக இடைத் தோ்தல் நடத்தப்படாது. இரட்டை செலவுகளை தவிர்ப்பதற்காக இது போன்று நடத்தப்படும். அந்த வகையில், தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான காலம் ஓராண்டுக்கும் குறைவாகவே இருப்பதால், மூன்று தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் இப்போது நடத்தப்படுமா? என்ற கேள்வி அரசியல் கட்சிகளிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களை சந்தித்தார்..."தமிழகத்தைப் போன்றே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தத் தொகுதிகளுக்கும் இடைத் தோ்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதுதொடா்பாக கடந்த வாரத்தில் இந்திய தோ்தல் ஆணையமானது காணொலி வழியாக ஆலோசனை நடத்தியது. அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதல் நிலை பரிசோதனைக்கு உட்படுத்தி தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து கேட்டறிந்தது. தமிழகத்தில் இடைத் தோ்தலுக்குத் தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை பரிசோதனைக்கு உட்படுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல் காணொலி வழியிலான ஆலோசனையின் போது இந்திய தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. தோ்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தாலும், இதுவரை இடைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தோ்தல் ஆணையம் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை என்றார். 

click me!