புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்கமாக கடலூர் புறப்பட்டார், முதலமைச்சர், மகாபலிபுரம், மரக்காணம் பகுதியை பார்வையிட்ட பின் கடலூர் செல்ல உள்ளார்.
புயல் கரையை கடந்துள்ள நிலையில் அது ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையாக உள்ளது. இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை காலை 8 மணி முதல் பார்வையிட்டு வருகிறார். முதலில் தரமணி, பிறகு வேளச்சேரியில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை பார்வையிட்ட அவர். பின்னர் அம்பேத்கர் நகரில் உள்ள நிவாரணம் முகாமையும் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நிவர் புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. மரங்கள் சாய்ந்துள்ளதால் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயல் கரையை கடந்த மரக்காணம், கடலூர் போன்ற பகுதிகள் வழக்கப்போல கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளது. வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது விவசாய நிலங்கள் வெள்ளக்காடாம மாறியுள்ளது. பயிர்கள் மோசமாக சேதமடைந்துள்ளன இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்கமாக கடலூர் புறப்பட்டார், முதலமைச்சர், மகாபலிபுரம், மரக்காணம் பகுதியை பார்வையிட்ட பின் கடலூர் செல்ல உள்ளார்.