முதல்வர் எடப்பாடி ஒரு போலி விவசாயி... இந்த ஸ்டாலின் யார் தெரியுமா..? மார்தட்டும் திமுக தலைவர்..!

By Thiraviaraj RMFirst Published Sep 28, 2020, 12:13 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி, காஞ்சிபுரத்தில் பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க் அணிந்தபடி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

ஆர்பாட்டத்திற்கு தலைமை ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘’தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் தான் விவசாயிகளுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 3700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிளே இந்தச் சட்டத்தை எதிர்த்துள்ளது.

மக்களுக்குத் துரோகம் செய்யும் எந்தச் சட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்போம். ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், டெல்லி, கர்நாடகாவில் போராட்டம் நடக்கிறது. ஹரியானாவில் தண்டவாளத்தில் படுத்து தூங்கி, சமைத்து சாப்பிட்டு, போராட்டம் நடத்துகிறார்கள். உத்தரப்பிரதேசம்-டெல்லிக்கு விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலம் செல்கின்றனர். கேரள மாநிலம் இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதி மன்றம் செல்ல உள்ளது. எடப்பாடி நீதிமன்றம் செல்ல வேண்டும் இல்லை எனில் மக்கள் சார்பில் திமுக நீதிமன்றம் செல்லும். தமிழகத்தில் எடுபிடியாக கூனிக்குறுகி மண்புழு போல் நெளிந்து நெளிந்து சென்று பதவி பெற்ற எடப்பாடி வெக்கம் இல்லாமல் இந்த சட்டத்தை ஆதரித்துள்ளார்.

வேளாண்துறை அதிகாரிகளை மிரட்டி பேட்டிக் கொடுக்க வைக்கிறார்கள். விவசாயிகள் என்று சொல்லி ஏமாற்றும் விஷவாயுதான் எடப்பாடி. விவசாயிகள் துன்பங்களுக்கு துணை நிற்பவன்தான் இந்த ஸ்டாலின். காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முன் வரும் போது, அதை தட்டிக் கேட்க துணிச்சல் உள்ளதா? அதிமுகவுக்கு 8 வழிச்சாலை வரும் நேரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் எடப்பாடி அவர்களை அழைத்து பேசி உள்ளாரா? குடிமராமத்து திட்டம் மூலம் கொள்ளையடிக்கும் நீங்கள்தான் விவசாயியா?.இந்த போலி விவசாயியை மக்கள் நம்ப மாட்டார்கள்’’என்று சாடியுள்ளார்.

click me!