பொறுத்து பொறுத்து பார்த்து மத்திய அரசை எகிறி அடித்த அதிமுக..!! கொள்கையில் சமரசம் இல்லை என உறுதி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2020, 12:08 PM IST
Highlights

அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக்காக கொள்கையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என அதிமுக கூறிவருவது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மொழி- தமிழ் உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இரு மொழிக் கொள்கையே என்றென்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக்கொள்கை எனவும், எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல, எந்த மொழியும் என் மீது திணிக்கப்படுவதை ஏற்க இயலாது என்ற கருத்தில் அதிமுக உறுதியாக இருக்கிறது என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த தீர்மானம் பாஜகவுக்கு எச்சரிக்கையாகவே விடப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பான அரசியல் கட்டத்தில், அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மிக முக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில், பாஜக கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்தாலும், தமிழகத்தின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த வகையில் மும்மொழி கொள்கை என்ற திட்டத்தை மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் கொண்டுவந்து திணிக்க முயற்சித்த நிலையிலும் அதிமுக சமரசம் இன்றி, இருமொழிக் கொள்கையை தங்களின் கொள்கையென உறுதியாக மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தியதுடன், ஒருபோதும் கொள்கை சமரசம் செய்துகொள்ள மாட்டாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக்காக கொள்கையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என அதிமுக கூறிவருவது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் அதிமுக கொண்டுவந்துள்ள முக்கிய தீர்மானங்கள் இதோ:-

கொரோனா களத்தில் மிக சிறப்பாக பணியாற்றி, மக்களின் துயர் துடைக்க பாடுபட்ட தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும், நாட்டிற்கே முன்னோடியாகவும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும், கொரோனா மருத்துவப் பணிகளையும் மறுவாழ்வு பணிகளையும் சட்ட ஒழுங்கையும் சிறப்பாக செயல்படுத்திய அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நன்றி கூறி பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை, பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களையும், நிலுவைத் தொகையையும் உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதில் மிக முக்கியமாக 6வது  தீர்மானமாக தாய்மொழி தமிழ்-உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இரு மொழிக் கொள்கையை என்றென்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக்கொள்கை, எந்த மொழிக்கும் கழகம் எதிரானது அல்ல. எந்த மொழியும் எம் மீது திணிக்கப்படுவதை ஏற்க இயலாது என்ற கருத்தில் கழகம் உறுதியாக இருக்கிறது என அதிமுக அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல் நீட் என்ற மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித்தேர்வை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து எதிர்க்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையில் நீட் தேர்வு மூலம்  மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற ஏழை எளிய முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதை தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயம் ஆக்கப்படுவது ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், நீட் தேர்வு முறையை கைவிடுமாறு மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

click me!