என் கட்சிக்காரனை அடிக்கிற வேலை வெச்சுக்காதீங்க! அப்புறம் நான் சாந்தமான ஆளா இருக்கமாட்டேன்: செம்மலைக்கு பீதி கெளப்பிய எடப்பாடியார்!

By Vishnu PriyaFirst Published Apr 10, 2019, 1:34 PM IST
Highlights

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு பக்கபலமாக இருந்து, பல அரசியல் விஷயங்களை எடுத்துச் சொல்லி, எடப்பாடியாருக்கு பெரும் டார்ச்சரைக் கொடுத்தவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை. இத்தனைக்கும் இவரும் எடப்பாடியாரின் சேலம் மாவட்டம்தான். ஆனாலும் கோபம் ஏன்?...எல்லாம் ஈகோ பஞ்சாயத்துதான். தன்னை விட மிக ஜூனியரும், தான் அமைச்சராக இருந்த காலத்தில் தன் முன் கைகட்டி நின்றவருமான பழனிசாமி இப்போது முதல்வர் என்பதை செம்மலையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் என்பார்கள். 
 

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு பக்கபலமாக இருந்து, பல அரசியல் விஷயங்களை எடுத்துச் சொல்லி, எடப்பாடியாருக்கு பெரும் டார்ச்சரைக் கொடுத்தவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை. இத்தனைக்கும் இவரும் எடப்பாடியாரின் சேலம் மாவட்டம்தான். ஆனாலும் கோபம் ஏன்?...எல்லாம் ஈகோ பஞ்சாயத்துதான். தன்னை விட மிக ஜூனியரும், தான் அமைச்சராக இருந்த காலத்தில் தன் முன் கைகட்டி நின்றவருமான பழனிசாமி இப்போது முதல்வர் என்பதை செம்மலையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் என்பார்கள். 

ஆனால் இரு அணிகளும் இணைந்தபோதும் செம்மலை, தன் ஈகோவை விடவில்லை. ‘கெட்டுப்போன நீரில் ஃபினாயிலை கலந்து சுத்தம் செய்வது போல், அ.தி.மு.க.வுடன் கலந்து அதை சுத்தம் செய்கிறோம்.’ என்று நக்கலும், ஆதங்கமும் கலக்க செம்மலை அடித்த கமெண்ட், எடப்பாடியாரை ஏக பிரஷராக்கியது. ஆனாலும் சில காரணங்களுக்காக அமைதி காத்தார். 

இந்நிலையில், இப்போது பா.ம.க.வுடன் கூட்டணி போட்டு தேர்தலை எதிர்கொண்டு வருகிறது அ.தி.மு.க. கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார் அன்புமணி. அவரோடு செம்மலையும் இருந்தார். அப்போது அன்புவிடம், ‘தர்மபுரியின் சிட்டிங் எம்.பி. நீங்கதானே! இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செஞ்சீங்க? இத்தன நாளா எங்கே போனீங்க?’ என்று கேள்வி கேட்டார் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர். இதில் டென்ஷனான செம்மலை, அந்த நபரை வாயிலேயே அடித்துவிட்டார். சொந்தக் கட்சிக்காரனை, அடுத்த கட்சி நபருக்காக எம்.எல்.ஏ. ஒருவர் வாயில் அடித்தது பெரும் பிரச்னையானது ஆளுங்கட்சியில். இது முதல்வரின் கவனத்துக்கு போனபோது, ஏற்கனவே செம்மலை மீதிருந்த பழைய பகையும் சேர்ந்து கொண்டதால் உச்ச ஆத்திரத்துக்கு போனார். 

இச்சூழலில், பிரசாரத்தின் நடுவே சேலம் மாவட்டத்திலுள்ள தன் வீட்டுக்கு சென்ற எடப்பாடியாரிடம், செம்மலையின் போக்கை கட்சி நிர்வாகிகள் எடுத்துச் சொல்லி மிகவும் வேதனையும், ஆதங்கமும்  பட்டிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து செம்மலையிடம் ‘சீனியர் நீங்க. ஆனா ரொம்ப கரடுமுரடா நடந்துக்குறீங்க, பேசுறீங்க. என்னை திட்டுனீங்க. பொறுத்துக்கிட்டேன், ஆனா என் கட்சிக்காரனை பொதுவெளியில் அடிக்கிறதையெல்லாம் தாங்கிக்க மாட்டேன். தனியறையில் கூட அப்படி நடக்க கூடாது. இது தொடர்ந்தா நான் சாந்தமான ஆளா இருக்க மாட்டேன்.’ என்று சாஃப்டாக ஆரம்பித்து, இறுதியில் செம்ம சவுண்டாக முடித்தாராம். 

இதை தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே எடுத்திருக்கும் செம்மலை, “அதென்ன ‘என் கட்சிக்காரன்’ அப்படின்னு சொல்றார்? அ.தி.மு.க.வை இவரா கண்டுபிடிச்சார்! இல்ல இவரு துவக்குனாரா! பன்னீரையும், அவரோட அணியையும் இவர் அ.தி.மு.க. ஆளுங்களாகவே இப்போ நினைக்கலைங்கிறது இது மூலமா உறுதியா தெரியுது. சீனியர் நான் இவர்ட்டயெல்லாம் அசிங்கப்பட வேண்டிய விதி. அம்மா இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா?” என்று நொந்தாராம். 

அதானே! அம்மா இருந்திருந்தால் பா.ம.க. கூட கூட்டணி ஏற்பட்டிருக்குமா? அம்மா இருந்திருந்தால் அன்புமணியெல்லாம் உங்க கட்சி வேட்பாளரை மைக்ல மிரட்டுவாரா? அம்மா இருந்திருந்தால் நீங்களெல்லாம் கட்சிக்காரன் மேலே கை வெச்சுட்டு இன்னமும் எம்.எல்.ஏ.வா இருக்க முடியுமா மிஸ்டர் செம்மலை.......

click me!