ப.சிதம்பரம் உங்க அழுகையை நிறுங்க சார்... பாஜகவை ஜெயிக்க வைப்பதே காங்கிரஸ்தான்... கிண்டலடித்த கெஜ்ரிவால்..!

By Thiraviaraj RMFirst Published Jan 17, 2022, 1:57 PM IST
Highlights

ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸும், பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதகு  மட்டுமே உதவுகின்றன.


பாஜகவின் நம்பிக்கையே காங்கிரஸ் கட்சிதான் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்  கெஜ்ரிவால் கிண்டலடித்துள்ளார்
 
இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் ட்வீட்டிற்கு ஒன்றிற்கு பதிலடி கொடுத்துள்ள கெஜ்ரிவால் ’’பாரதிய ஜனதாவின் நம்பிக்கை காங்கிரஸ்தான் கோவா மக்கள் அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.  ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸும், பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதகு  மட்டுமே உதவுகின்றன. இதனால் மறைமுகமாக பாஜகவுக்கு உதவுகின்றன. இதை அரவிந்த் கெஜ்ரிவால் "உறுதிப்படுத்தியுள்ளார்" என ப.சிதம்பரம் தெரிவித்து இருந்தார். 

கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் மூத்த தேர்தல் பார்வையாளராக இருக்கும் சிதம்பரம், கோவா வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்து காங்கிரஸைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குன் பதிலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “அழுவதை நிறுத்துங்கள் சார். கோவா மக்கள் நம்பிக்கை பார்க்கும் இடத்தில் வாக்களிப்பார்கள். “காங் பாஜகவுக்கு நம்பிக்கை, கோவாக்கள் அல்ல. உங்களின் 17 எம்எல்ஏக்களில் 15 பேர் பாஜகவுக்கு மாறினர். காங்கிரஸின் உத்தரவாதம்- காங்கிரஸுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு பாதுகாப்பாக வழங்கப்படும். பிஜேபிக்கு வாக்களியுங்கள், பாதுகாப்பான பிரசவத்திற்காக காங்கிரஸை வழிநடத்துங்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குறிப்பாக பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன.

 

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம், குடிநீர் வழங்கப்படும்; 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். கோவாவில் சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம். வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ3,000 ஊக்கத்தொகை, கிராமங்களில் மருத்துவமனைகள் என்பதும் ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதி. மேலும் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் சூழ்நிலையைப் பொறுத்து பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் ஆம் ஆத்மி தயார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

click me!