ஆறு மாசம் ஆனாலும் பணப்பிரச்சனை தீராது …ப.சிதம்பரம் பகீர் பேச்சு…

First Published Dec 24, 2016, 7:35 AM IST
Highlights


ஆறு மாசம் ஆனாலும் பணப்பிரச்சனை தீராது …ப.சிதம்பரம் பகீர் பேச்சு…

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் பணப் புழக்கம் குறைந்து போனதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இதற்கு பெரிதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இது  குறித்து சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்த பிரச்சனை 6 மாதங்கள் ஆனாலும் தீராது என அதிரடியாக தெரிவித்தார்,

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்  மூலம் கருப்புப் பணம் அதிகரித்துள்ளதாக சொல்லும் மோடி, 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளது கேலிக்குரியது என்றார். புதிய 2000 ரூபாய் நோட்டுக்களால் கருப்புப் பணம் அதிகரிக்குமே தவிர குறையாது என்றும்  தெரிவித்தார்.

முறையான விதி முறைகளை பின்பற்றாமல் பொது மக்களை மோடி அரசு வாட்டி வதைத்து வருவதாக குற்றம் சாட்டிய ப.சிதம்பரம், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் தோல்வி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!