என்னது ப.சிதம்பரம் கைது பற்றியா..? அது பற்றி எல்லாம் பேச முடியாது... பதறிய துரைமுருகன்..!

Published : Sep 07, 2019, 10:17 AM IST
என்னது ப.சிதம்பரம் கைது பற்றியா..? அது பற்றி எல்லாம் பேச முடியாது... பதறிய துரைமுருகன்..!

சுருக்கம்

ப.சிதம்பரம் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எல்லாம் பேச முடியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பதறியுள்ளார்.

ப.சிதம்பரம் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எல்லாம் பேச முடியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பதறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனது தொகுதிப் பணிகளை துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ப.சிதம்பரம் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கூட்டணி கட்சியின் முக்கிய தலைவரான ப.சிதம்பரம் கைதுக்கு எதிராக துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் பரபரப்பான கருத்துகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரைமுருகனோ அது சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் உட்பட்டது. அது பற்றி அதிகம் பேச முடியாது என்று கூறி செய்தியாளர்களை மேற்கொண்டு அது குறித்து கேட்கவிடாமல் செய்துவிட்டார். 

ப.சிதம்பரம் கைதுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் அதிகம் பேசுவதில்லை அவர் கைது பயத்தில் இருப்பதாக ஹெச்.ராஜா மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் துரைமுருகனும் ப.சிதம்பரம் கைது குறித்து பேச மறுத்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் அது சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் உட்பட்டது  என்று கூறி வேறு ஜகா வாங்கியுள்ளார். இதன் மூலம் ப.சிதம்பரம் கைது விவகாரம் திமுக தரப்பையும் அசைத்துப் பார்த்திருப்பது அப்பட்டமாக தெரிவது போல் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!