இதெல்லாம் ஒரு பொழப்பா... மோடி அரசை டுவிட்டரில் பங்கம் பண்ணிய ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Nov 27, 2019, 3:21 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் நவம்பர் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அரங்கேறிய அரசியலமைப்பின் மிக மோசமான அத்துமீறல்கள். 2019-ம் ஆண்டு அரசியலமைப்பு தினத்தின் நினைவாக எஞ்சியிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யும் பொருட்டு அவரை காலை 4 மணிக்கு எழுப்ப வேண்டியதன் அவசியம் என்ன?

மகாராஷ்டிராவில் நவம்பர் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அரங்கேறிய அரசியலமைப்பின் மிக மோசமான மீறல்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த ஜாமீன் தொடர்பாக வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் இருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மத்திய அரசின் கொள்ளைகள் குறித்து தனது குடும்பத்தினர் மூலம் அவ்வப்போது டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், மகாராஷ்ராவில் முதல்வராக பதவியேற்க உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில் கூறுகையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கட்சி நலன்களை தவிர்த்து, 3 கட்சிகளுக்கும் பொதுவான நலன்களான விவசாயிகள் நலன், முதலீடு, வேலைவாய்ப்பு, சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்களை செயல்படுத்த இணைந்து வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

It was an assault on the office of Rasthrapathi to wake him up at 4.00 am to sign an order revoking President's Rule.

Why could it not have waited until 9.00 am in the morning?

— P. Chidambaram (@PChidambaram_IN)

 

மேலும், மகாராஷ்டிராவில் நவம்பர் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அரங்கேறிய அரசியலமைப்பின் மிக மோசமான அத்துமீறல்கள். 2019-ம் ஆண்டு அரசியலமைப்பு தினத்தின் நினைவாக எஞ்சியிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யும் பொருட்டு அவரை காலை 4 மணிக்கு எழுப்ப வேண்டியதன் அவசியம் என்ன? 9 மணி வரை காத்திருக்கக் கூடாது. இது குடியரசுத் தலைவர் மாளிகை மீதான தாக்குதல் எனவும் ப.சிதம்பரம் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!