செய்யாறு சட்டப்பேரவை தேர்தல்... சீட் கேட்கும் ராமதாஸ் மருமகள்? அதிர்ச்சியில் அதிமுக..!

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 11:48 AM IST
Highlights

செய்யாறு சட்டமன்ற தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகள் சவுமியா அன்புமணிக்கு சீட் கேட்டுள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

செய்யாறு சட்டமன்ற தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகள் சவுமியா அன்புமணிக்கு சீட் கேட்டுள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் தற்போது எம்எல்ஏவாகவும், மாவட்ட செயலாளராகவும்  உள்ள தூசி மோகன் தான். கடந்த 5 ஆண்டுகளில் செய்யாறு தொகுதிக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றியுள்ளார். ஆகையால், இந்த முறையும் எனக்குத்தான் சீட் வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். 

அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சருகம் அமைப்பு செயலாளரும், வேலூர் மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ள முக்கூர் சுப்பிரமணியன் நான் அமைச்சராக இருந்தபோது  தொகுதி மக்களின் தேவைகள் அறிந்து மாவட்ட மருத்துவமனை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததை மக்கள் நினைத்துப்பார்க்கிறார்கள் கட்சி மேலிடத்திலும் செல்வாக்கு உள்ளதால் நிச்சயம் சீட்டு வாங்கி விடுவேன் என தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார். அதேபோல், செய்யாறு நகராட்சியில் 2 முறை சேர்மனாகவும், 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதல் பெண் வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பு இழந்த தனக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என பாவை  ரவிசந்திரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் சீட்டு கேட்டுள்ளனர். 

அதிமுகவில் இவ்வாறு கடும் போட்டி இருக்கும் நிலையில் இக்கூட்டணியில் செய்யாறு தொகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணிக்கு சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பாமக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாரும் சீட் கேட்டுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் மற்ற கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை முடித்து வேட்பாளர் அறிவிப்பு வெளியாகிவிடும் என்பதால் ஆளும் கட்சியினர் இடையை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!