தந்தையை மிஞ்சிய மகன்.. ஸ்டாலினே நினைத்து பார்க்காத வகையில் மாஸ் காட்டிய உதயநிதி..!

By vinoth kumarFirst Published May 2, 2021, 4:40 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விட அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் 53,799 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விட அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் 53,799 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதேசமயம், 11 அதிமுக அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். தற்போது, நிலவரப்படி திமுக கூட்டணி 153 இடங்களும், அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கஸ்ஸாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர். தற்போது நிலவரப்படி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 71,181 வாக்குகளும், பாமக 17,382 வாக்குகளையும் பெற்றுள்ளார். உதயநிதி  53,799 வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலை வகித்து வெற்றி உறுதி செய்துள்ளார்.

அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8 சுற்றுகளின் முடிவில், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 33,030 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 13,149 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையேயான 19,881 வாக்குகள் ஆகும். வாக்கு சுற்று எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும், தந்தை ஸ்டாலினை விட, மிக அதிகமான வாக்குகளை மகன் உதயநிதி பெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது. 

click me!