மழை நீரால் சூழப்பட்ட சென்னை... வேட்டியை மடித்துக் கட்டி வெள்ளத்தில் இறங்கிய ஓ.பி.எஸ்..!

By Thiraviaraj RMFirst Published Nov 26, 2020, 3:08 PM IST
Highlights

முன்பு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது அவர் வேட்டியை மடித்துக் கட்டி முழங்காலுக்கு மேல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மக்கள் பிரச்னையை கேட்டறிந்தார். அதே பாணியில் தற்போது ஓ.பி.எஸ் மக்கள் பணியாற்றி வருகிறார்.

நிவர் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக வேளச்சேரியின் பல பகுதி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தப் பகுதிகளில் துணைமுதல்வர்  ஓ.பி.எஸ்  நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். முட்டியளவு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அவர் வேட்டியை மடித்துக் கொண்டு பார்வையிட்டு, பொதுகம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

வேளச்சேரி பகுதி ஏற்கனவே சதுப்புநில பகுதி என்பதால், அங்கு மழைநீர் தேங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. அதன்படி, கடந்த இரு நாட்கள் பெய்த மழை காரணமாக, வேளச்சேரியில் சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரில் கார்கள் பழுதடையாமல் தடுக்க, ரயில்வே மேம்பாலத்தின் மீது இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராம்நகர்  உள்பட பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளன. வேளச்சேரி பேருந்து நிலையம்உள்பட  பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், மழைநீரை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல பகுதிகளில்  தரைதளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கந்தன்சாவடி, தரமணி,  பள்ளிக்கரனை உள்பட பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது.  அந்த பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறார். தேங்கிய  மழைநீரை அகற்ற மாநராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். அப்போது எதைப்பற்றியும் கருதாமல் முழங்காலுக்கும் மேல் சூழப்பட்ட மழைவெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். அவரது எளிமையை அப்பகுதி மக்கள் போற்றி வருகின்றனர். 

முன்பு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது அவர் வேட்டியை மடித்துக் கட்டி முழங்காலுக்கு மேல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மக்கள் பிரச்னையை கேட்டறிந்தார். அதே பாணியில் தற்போது ஓ.பி.எஸ் மக்கள் பணியாற்றி வருகிறார்.

click me!